நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பின் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
சில இடங்களில், குறிப்பாக மத்திய, சப்ரகமுவ, தெற்கு, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றர் அளவில் மழை பெய்யலாம் என்று அந்த திணைக்களம் கூறியுள்ளது.
வளிமண்டலவியல் திணைக்களம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும் என்றும் இதனால் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறும் திணைக்களம் கேட்டுக்கொண்டுள்ளது.