மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு ஜூன் மாதம் 12ம் திகதி வரை இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் அவகாசம் வழங்கியுள்ளது.
விளையாட்டுத் துறை அமைச்சராக இருந்த காலத்தில் கெரம் போர்ட் கொள்வனவு செய்த போது 53 மில்லியன் நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி வழக்கு விசாரணை இன்று இடம்பெற்ற போது மஹிந்தானந்த அளுத்கமகே நீதிமன்றில் ஆஜராகியிருந்தார்.
இந்த சம்பவத்தில் இரண்டாவது சந்தேகநபராக பெயரிடுவதற்கு முன்னாள் சதொச தலைவர் நலின் பெர்ணான்டோவிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டிருப்பதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றில் தெரிவித்தது.
அதன்படி குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு கால அவகாசம் கோரியதையடுத்து நீதிமன்றம் ஜூன் மாதம் 12ம் திகதி வரை அவகாசம் வழங்கி உத்தரவிட்டுள்ளது.