கொழும்பு மேயர் ரோஸியால் வெடித்தது 57 லட்சம் ரூபா சர்ச்சை

265 0

கொழும்பு மாநகர மேயர் ரோஸி சேனநாயக்கவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசல கூடத்தைச் சீரமைக்க 57 லட்சம் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது என்று கூறப்படுகின்றது. இந்த விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கொழும்பு மாநகர சபையின் அமர்வு நேற்று நடைபெற்றது. அதில் ஜே.வி.பியின் மாநகர சபை உறுப்பினர் சுமித் பாசப்பெரும கருத்துத் தெரிவித்தார்.

கொழும்பு மாநகர சபையின் புதிய மேயர் ரோசி சேனாநாயக்க தனது உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசலகூடத்தை நவீன முறையில் சீரமைக்க 57 லட்சம் ரூபாவை ஒதுக்கியுள்ளார்.

இந்த மலசலகூடம் 4 ஆண்டுகளாகப் பயன்படுத்தப்படவில்லை. அதைச் சீரமைக்க இப்போது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறினார் மேயர் ரோசி சேனநாயக்க.

மேயர் தனது உத்தியோகபூர்வ இல்லத்தின் மலசல கூடத்தைச் சீரமைக்க இந்தளவு பெரிய தொகையைப் பயன்படுத்துகின்றார். ஆனால் கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பொது மலசல கூடங்கள் திருத்தப்படவில்லை. அதைக் கவனத்தில் எடுக்காதது வருந்தத்தக்க விடயம் என்று சுமித் பாசப்பெரும கூறினார்.

 கொழும்பு மாநகர சபைக்குட்பட்ட பொது மலசல கூடங்கள் ஏற்கனவே சீரமைக்கப்பட்டுள்ளன என்று பதிலளித்துள்ளார் ரோசி சேனநாயக்க.

Leave a comment