பாதத்தில் ஏற்பட்டுள்ள காயம் குணமடைந்து வரும் நிலையில், உலகக்கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாட முடியுமா என்ற கவலையில் கால்பந்தாட்ட வீரர் நெய்மர் உள்ளார்.
பிரேசில் நாட்டின் முன்னணி கால்பந்து வீரர்களில் ஒருவர் நெய்மர். இவருக்கு கடந்த பிப்ரவரி மாதம் விளையாடியபோது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதனை அடுத்து காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இதன் காரணமாக கடந்த 3 மாதங்களாக போட்டிகளில் பங்கேற்காத நெய்மர், ஜூன் மாதம் தொடங்க உள்ள உலகக் கோப்பைக்கு தயாராகி வருகிறார்.
இந்நிலையில், நெய்மர் தனது கால் காயம் மற்றும் உலகக் கோப்பை எதிர்பார்ப்பு குறித்து சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், தனது காயம் மிக கடுமையானது என்றும், மூன்று மாதங்களாக விளையாடாமல் உலகக் கோப்பையில் விளையாடுவது மிகப்பெரிய சவால் என்றும் கவலை தெரிவித்துள்ளார்.
மேலும் அறுவை சிகிச்சைக்குப் பிறகு பயம் இருந்தபோதிலும், மருத்துவர்களின் அறிவுரைகளுக்குப் பிறகு தற்போது மன அமைதி கொண்டுள்ளதாகவும், அவ்வப்போது பயிற்சியிலும் ஈடுபடுவதாகவும் தெரிவித்துள்ளார்.