அரசியல் கட்சிப் பேதமின்றி சமுர்த்தி பயனாளிகள் தெரிவு செய்யப்படுவார்கள் என்று அமைச்சர் சமூக வழுவுட்டல் பி.ஹரிஸன் தெரிவித்தார்.
சமுர்த்தி அபிவிருத்தித் திணைக்களம் சார்ந்த 22 தொழிற்சங்க அமைப்புக்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பில் அவர் உரையாற்றிய சமூக வழுவுட்டல் அமைச்சர்
சமூக வலுவூட்டல் வேலைத்திட்டத்தில் காலத்திற்குப் பொருத்தமான மாற்றங்களை அறிமுகம் செய்து வறுமையை ஒழிப்பது அரசாங்கத்தின் நோக்கமாகும் னெ;றும் கூறினார்.
நிவாரணம் வழங்கும் திட்டத்தை சீராக்கி, அதில் அரசியல் மயமாக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இலங்கையில் இருந்து வறுமையை முற்றாக ஒழித்துக்கட்டும் வேலைத்திட்டத்தின் கீழ் மேலும் இரண்டு லட்சம் குடும்பங்களுக்கு சமுர்த்தி அனுகூலங்களை வழங்குவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது என்றும் அமைச்சர் ஹரிஸன் மேலும் தெரிவித்தார்.