பாராளுமன்றத்திலுள்ள கட்சித் தலைவர்களின் கூட்டம் இன்று (17) காலை நடைபெறவுள்ளது.
சபாநாயகர் கரு ஜயசூரியவின் தலைமையில் பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் இன்று முற்பகல் 11.30 மணிக்கு இக்கூட்டம் ஆரம்பமாகவுள்ளது.
அடுத்த வார பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பில் இதன்போது கலந்துரையாடப்படவுள்ளது.
பாராளுமன்ற கூட்டத் தொடரை ஜனாதிபதியின் விசேட அறிவிப்பின் மூலம் நிறைவு செய்ததனால், குழுக்கள் அனைத்தும் செல்லுபடியாக்கப்பட்டன. இக்குழுக்களை மீண்டும் புதிதாக அமைப்பது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.