டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர் மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த 100 பேர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
டி.டி.வி. தினகரனின் ஆதரவாளர்கள், தீபா பேரவையினர் மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த 100 பேர் நேற்று அக்கட்சியில் இருந்து விலகி முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அ.தி.மு.க.வில் இணைந்தனர்.
இதுகுறித்து அ.தி.மு.க. தலைமைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
டி.டி.வி.தினகரன் புதிதாக ஆரம்பித்துள்ள அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் காஞ்சீபுரம் கிழக்கு மாவட்ட பாசறை செயலாளர் கே.பி.கோபிநாத், ஆலந்தூர் பகுதி அம்மா பேரவை செயலாளர் டி.கண்ணன், துணை தலைவர் வாட்டர் கே.சரவணன், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி பகுதி செயலாளர் எஸ்.கவுதம் சுரேஷ், 164-வது வட்ட கழக செயலாளர் புல்லட் கே.ராஜேஷ் மற்றும் தே.மு.தி.க.வை சேர்ந்த ஆலந்தூர் பகுதி இளைஞர் அணி செயலாளர் வி.ரமேஷ், 156-வது வட்ட துணைச் செயலாளர் பி.சுந்தர் மற்றும் காஞ்சீபுரம் மாவட்ட தீபா பேரவை தலைவர் எம்.ஜி.ஆர்.விமலானந்தர் உள்பட 100 பேர் அ.தி.மு.க. இணை ஒருங்கிணைப்பாளரும், தமிழக முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அவரது இல்லத்தில் வைத்து அ.தி.மு.க.வின் அடிப்படை உறுப்பினர்களாக தங்களை இணைத்துக் கொண்டனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.