வடக்கு கிழக்குக்கு புதிதாக 600 தமிழ் காவற்துறை அலுவலர்கள்

5298 21

police-71-720x480எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் புதிதாக 600 தமிழ் காவற்துறை அலுவலர்கள் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பணிகளில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய கலந்துரையாடல் துறை அமைச்சர் மனோ கணேசன் இந்த தகவலை தெரித்தார்.
நாட்டில் இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதன் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதனிடையே, தொடருந்து நிலையங்களில் அறிவிப்பு செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு மூன்று தேசிய மொழிகளிலும் பயிற்சி வழங்க தேசிய மொழிகள் தொடர்பான ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.
பயணிகளிடம் இருந்து கிடைத்துள்ள முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழுவின் தலைவர் தயா எதிரிசிங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடரூந்து திணைக்களத்திற்கு அறிவிக்ப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Leave a comment