மன்னார் மடு தேவாலய பகுதியில் 300 வீடுகள் – இந்திய அரசாங்கம் நிதி உதவி

288 0

மன்னார் மடுதேவாலய பகுதிக்கு அருகாமையில் 300 வீடுகளை அமைப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கையிலுள்ள வழிபாட்டு தளங்கள் மத்தியில் மன்னார் மாவட்டத்தில் உள்ள மடு தேவாலயத்திற்கு முக்கிய இடம் கிடைத்துள்ளதுடன் இதனை தேசிய மற்றும் வெளிநாட்டு கிறிஸ்தவ பக்தர்கள் போன்று ஏனைய பக்தர்களின் யாத்திரைக்கு உட்பட்டதாக அமைந்துள்ளது.

யாத்திரை காலப்பகுதியில் இங்குள்ள தங்குமிட வசதிகள் போதுமானதாக இல்லை என்பதை கவனத்தில் கொண்டு தேவாலாயத்திற்கு வருகை தரும் பயணிகள் மற்றும் பக்தர்கள் பயன்பாட்டிற்காக 300 வீடுகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டது.

இந்த வீடமைப்புத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக 300 மில்லியன் ரூபாவை இந்திய அரசாங்கம் வழங்குவதற்கு உடன்பட்டுள்ளது.

இதற்கமைவாக இந்த நிதியுதவியை பெற்றுக்கொள்வது தொடர்பில் இலங்கை அரசாங்கமும் மற்றும் இந்திய அரசாங்கத்திற்கு இடையில் புரிந்துணர்வு உடன்படிக்கைகயை மேற்கொள்வதற்காக சுற்றுலா அபிவிருத்தி மற்றும் கிறிஸ்தவ மத விவகாரங்கள் அமைச்சர் ஜோன் அமரதுங்க வழங்கிய ஆவணத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a comment