இவ்வருடத்தின் கடந்த ஐந்தரை மாதங்களாக நாடு முழுவதும் 18 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இவர்களில் 13 பேர் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளதாகவும் தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரசிலா சமரவீர தெரிவித்துள்ளார்.
இந்த நோயாளர்களில் அதிகமானோர் மேல் மாகாணத்திலேயே பதிவாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
நாட்டில் தற்பொழுது பெய்து வரும் மழையுடன் டெங்கு நோய் பரவும் ஆபத்து காணப்படுவதாகவும் இதனால், சூழலை சுத்தமாக வைத்திருக்குமாறும் அவர் பொது மக்களைக் கேட்டுள்ளார்.