ஹட்டனில் ஆற்றில் மிதந்து வந்த மூதாட்டி

259 0

ஹட்டனில் ஆற்றில் மிதந்து வந்த மூதாட்டி ஒருவரை  பொதுமக்கள் ஒன்றிணைந்து காப்பாற்றியுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காசல்ரீ நீர் தேக்கத்திற்கு நீர் ஏந்தி செல்லும் டிக்கோயா ஆற்றில் இருந்தே குறித்த மூதாட்டி மீட்கப்பட்டுள்ளார்.

ஹட்டன் பொலிஸாரும் வனராஜா தோட்டபகுதி மக்களும் இனைந்து குறித்த மூதாட்டியை உயிருடன் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

வனராஜா ஸ்ரீ சித்தி விநாகர் ஆலயத்திற்கு அருகாமையில் இருந்து குறித்த மூதாட்டி மீட்கபட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த முதாட்டியின் பெயர் முகவரி எதுவுமே இதுவரையிலும் இனங்காணப்படவில்லையென ஹட்டன் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரனைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

ஆற்றில் இருந்து உயிருடன் மீட்கபட்ட முதாட்டி டிக்கோயா கிழங்கன் மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டுள்ளதோடு, இவர் ஆற்றில் தவறி விழுந்தாரா அல்லது வேறு யாரும் நபர்களால் தள்ளிவிடப் பட்டாரா என்ற சந்தேகம் எழுந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரனைகலை ஹட்டன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a comment