ஜனாதிபதி தேர்தலில் பொருத்தமான வேட்பாளர் கோட்டபாயவே-சந்திம

279 0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டபாய ராஜபக்ச ஒரு பொருத்தமான வேட்பாளர் என நாடாளுமன்ற உறுப்பினர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.

எனினும், தங்கள் குழு ஆதரிக்கும் வேட்பாளரை உரிய நேரத்தில் அறிவிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் கொழும்பில் இடம்பெற்ற வருடாந்த மாநாடொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நாட்டின் எதிர்காலத்திற்கான திட்டங்களை உருவாக்குதல், பரிந்துரைகள் முன்வைக்கப்படும் மாநாடுகளில் கலந்துகொள்ள வேண்டும் என்பது தனது கருத்து என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment