இலங்கை போக்குவரத்து சபை பஸ் கட்டணங்கள் அதிகரிக்கும்!

284 0

இலங்கை போக்குவரத்து சபையினரும் பஸ் கட்டணங்களை அதிகரிப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளது. பஸ் கட்டணங்களை அதிகரிக்காவிடத்து போக்குவரத்து சபை மீண்டும் நட்டமீட்டும் நிறுவனமாக மாறும் ஆபத்துள்ளதாக அச் சபையின் பிரதானி ஒருவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தில் இலங்கை போக்குவரத்து சபை 12 மில்லியன் ரூபா இலாமீட்டியுள்ளது. ஆகவே தற்போது எரிபொருள் விலை அதிகரித்துள்ளமையினால் அதனை தொடர்ந்தும் பேண முடியாத நிலை உருவாகியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான 5400 பஸ் வண்டிகள் தினந்தோறும் போக்குவரத்து சேவையில் ஈடுபடுகின்றன.

இதன்மூலம் நாளாந்தம் 1.28 மில்லியன் கிலோமீற்றர் தூரம் பயணம் மேற்கொள்கிறது. அதற்காக நாள் ஒன்றுக்கு மூன்று இலட்சத்து எழுபத்தையாயிரம் லீற்றர் டீசல் தேவையாக உள்ளது.

எனவே போக்குவரத்து சபையினருக்கு விசேட சலுகையில் எரிபொருள் விநியோகிக்கப்படுமானால் பஸ் கட்டணம் அதிகரிப்பு அவசியமில்லை என்றார்.

Leave a comment