எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் போட்டியிட தகுதியாக வேட்பாளரை களமிறக்க வேண்டுமெனில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே அதற்கு பொருத்தமானவர் என நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
2020 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தல் ஐக்கிய தேசியக் கட்சி நிலைப்பாடு தொடர்பில் அமைச்சர் மங்கள சமரவீர கூறுகையிலேயே அவர் இதனை சுட்டிக்காட்டினார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதானது,
2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சி தனித்தே பயணத்தை ஆரம்பிக்கும். அதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
அத்துடன் ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற கேள்விக்கும் எம்மிடம் பதில் உள்ளது. 2020 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தேர்தலில் ஐ.தே.க. சார்பில் போட்டியிடுவதற்கு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தகுதியானவர். ஆகவே அவரை களமிறக்க வைப்பதற்கான நடவடிக்கைகளை நாம் முன்னெடுப்போம்.
இந் நிலையில் கட்சியில் தலைமைத்துவத்திலிருந்து ரணிலை வீழ்த்த நினைக்கும் நபர்கள் கூட்டு எதிர்க்கட்சியுடன் சம்பந்தப்பட்ட நபர்களாகவே இருக்க வேண்டும்.
மேலும் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பாரிய நெருக்கடிகள், தலைமைத்துவம் மற்றும் இரண்டாம் நிலை உறுப்பினர்கள் இடையில் விரிசல் இருப்பதாக பலர் பல்வேறு கருத்துக்களை கூறிகின்றனர். ஆனால் இப்போது கட்சிக்குள் எந்த முரண்பாடுகளும் இல்லை என்றார்.