கடந்த வருடம் டிசெம்பர் 31ஆம் திகதிவரை 5 வருடங்களாக வாகன வரி அனுமதிப் பத்திரம் பெறப்படாத வாகனங்கள் அனைத்தினதும் பதிவுகள் நீக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வாகனங்கள் பயன்பாட்டில் இல்லாத வாகனங்கள் எனக் கருதி அவை அனைத்தினதும் பதிவுகள் நீக்கப்படும் என வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து குறிப்பிட்ட அவர்,
“தங்கள் வாகனத்துக்கு கடந்த 5 ஆண்டுகளாக வரி அனுமதிப்பத்திரம் பெறவில்லையாயின் உடனடியாக அருகிலுள்ள பிரதேச செயலகத்தில் நிலுவையைச் செலுத்தி வரிப்பத்திரத்தைப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
வாகனம் பழுதடைந்த நிலையில் இருக்குமாயின் பிரதேச செயலகத்தில் நிலுவைக் கொடுப்பனைவைச் செலுத்தி பற்றுச்சீட்டைப் பெற்றுக்கொள்ளல் வேண்டும்” என்று ஆணையாளர் கேட்டுள்ளார்.
வரும் ஜூன் 30ஆம் திகதிவரை வாகன உரிமையாளர்கள் மேற்சொன்ன எந்த நடவடிக்கையையும் செய்யாதிருப்பின், அந்த வகை வாகனங்களின் பதிவுகள் எதுவித முன்னறிவித்தலுமின்றி மோட்டார் வாகனப் பதிவாளரால் நீக்கப்படும் எனவும் வடக்கு மாகாண மோட்டார் போக்குவரத்துத் திணைக்கள ஆணையாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.