மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் அணைகள் இருக்கும் – மத்திய அரசு

255 0

காவிரி படுகையில் உள்ள அணைகள் அனைத்தும் மாநில அரசுகளின் கட்டுப்பாட்டில் இருக்கும் என வரைவு அறிக்கையில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக மத்திய அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் இன்று வரைவு செயல் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில் உள்ள முக்கிய அம்சங்கள்:

* காவிரி நதிநீரை பகிர்ந்து கொடுப்பதற்கு 10 பேர் கொண்ட அமைப்பு உருவாக்கப்படும். அதில் 2 நிரந்தர உறுப்பினர்கள், பகுதிநேர உறுப்பினர்கள் 2 பேர், மாநிலத்திற்கு ஒருவர் என 4 பேர் இடம்பெறுவர். மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங்கும் இந்த அமைப்பில் இடம்பெறுவார்

* காவிரி அமைப்பு தலைவரின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 65 வயதுவரை.

* அணைகளின் நீர் திறப்பு குறித்து இந்த குழு முடிவு செய்யும். நீர் திறப்பு காலங்களில் குறித்து மாநில அரசுகளுடன் இணைந்து இந்த குழு முடிவு எடுக்கும். குழுவில் உள்ள பெரும்பான்மை உறுப்பினர்கள் பரிந்துரையின்பேரில் அணைகளில் நீர் திறக்கப்படும்.

* காவிரி படுகையில் உள்ள அனைத்து அணைகளும் மாநில அரசுகளின கட்டுப்பாட்டில் இருக்கும்.

* முதற்கட்டமாக குழுவின் அடிப்படை பணிகளுக்கு மத்திய அரசு ரூ.2 கோடி வழங்கும். குழுவின் நிர்வாக செலவு மற்றும் உறுப்பினர்களின் சம்பளத்திற்கு மாநில அரசுகளே பொறுப்பேற்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Leave a comment