மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் கடவத்தையில் இருந்து மீரிகம வரையிலான பகுதியின் நிர்மாணப் பணிகள் தற்போது இடம்பெற்று வருகின்றன.
நிர்மாணப் பணிகள் 2020ம் ஆண்டு நிறைவடையும் என்று செயற்றிட்ட பணிப்பாளர் சரத் குமார தெரிவித்தார்.
37 கிலோ மீற்றர் நீளமான இந்த வீதியில் நான்கு மருங்குகள் அமைக்கப்படவுள்ளன. சுற்றாடல் பாதிப்பை மட்டுப்படுத்தும் நோக்கில் இந்தப் பாதையில் 12 கிலோ மீற்றர் நீளமான பகுதி பாலமாக அமைக்கப்படும் என்று பணிப்பாளர் கூறினார்.
இதற்கான நிர்மாணப் பணிகளுக்கு 158 ஆயிரம் மில்லியன் ரூபா செலவிடப்படவுள்ளது. இந்த நெடுஞ்சாலை நிர்மாணத்தின் போது இருப்பிடங்களை இழந்தவர்களுக்கான நஷ்ட ஈட்டுக் கொடுப்பனவுகளில் 55 வீதம் வழங்கப்பட்டுள்ளதாக செயற்றிட்ட பணிப்பாளர் மேலும் தெரிவித்தார்.