13 வருட உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு அரச நிறுவனங்களைப் போன்று அங்கீகரிக்கப்பட்ட தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புக்களை பெற்றுக்கொள்ள தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
இதற்காக முன்வந்த நிறுவனங்களுக்கு கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் நன்றி தெரிவித்துள்ளார்.
நாட்டின் முன்னேற்றத்திற்காக மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளில் அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து செயற்படுவதன் அவசியத்தையும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
13 வருட உறுதி செய்யப்பட்ட கல்வி வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பில் கல்வியமைச்சில் அண்மையில் இடம்பெற்ற இந்த பேச்சுவார்த்தையில் அரச மற்றும் தனியார் நிறுனங்களில் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த வேலைத்திட்டத்தின் கீழ் 26 தொழில் கற்கை நெறிகள், பாடசாலை கற்றை நெறிகளில் சேர்க்கப்படவுள்ளது.
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் சித்தி பெற்ற மற்றும் சித்தி பெறத் தவறிய மாணவர்கள், இந்தத் தொழில் கற்கை நெறியின் கீழ் கல்வியை பெற்றுக் கொள்வதற்கான சந்தர்ப்பம் கிடைக்கிறது. இதன் முதற்கட்டத்தின் கீழ் 42 பாடசாலைகளை சேர்ந்த இரண்டாயிரத்து 400 மாணவர்கள் தற்போது கல்வி கற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.