ரூபவாஹினி தலைவர் இராஜினாமா

250 0

இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் ரவி ஜயவர்தன இராஜினாமா செய்துள்ளார்.இவர் தனது இராஜினாமா கடிதத்தை தகவல் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவிடம் ஒப்படைத்துள்ளார்.

கடந்த மூன்று வருட காலமாக அந்த பதவியில் இருந்து வந்த நான் தனிப்பட்ட காரணத்திற்காக இந்த இராஜினாமாவை மேற்கொண்டதாக அவர் ஊடகங்களிடம் குறிப்பிட்டுள்ளார்.

ரூபவாஹினி நிறுவனத்தை இலாபம் உழைக்கும் நிறுவனமாக மாற்றி, மக்களிடம் ஜனரஞ்சகப்படுத்துவதற்கு தனக்கு முடிந்ததாகவும், இதனால், திருப்தியுடன் நிறுவனத்திலிருந்து விடைபெறுவதாகவும் அவர் ஊடகங்களிடம் மேலும் கூறியுள்ளார்.

Leave a comment