தென்னை மரங்களை வெட்டுவதற்கு தடை – அரசாங்கம்

239 0

தென்னை மரங்​களை வெட்டுவதை தடை செய்வது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

இதற்கமைய, தென்னை மரங்களை வெட்டுவதற்கு அனுமதிப் பத்திரம் பெறுவதை கட்டாயமாக்குவது தொடர்பிலும் அரசாங்கம் கவனம்​ செலுத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பான யோசனையானது எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் முன்வைப்பதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சின் செயலாளர் ஜே.ஏ. ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

தேங்காய் குறித்து தற்​போது காணப்படும் பிரச்சினைகளை கருத்திற்கொண்டே இவ்வாறான முடிவு எடுக்கப்பட்டதாக அவர் தெரிவித்துள்ளார்.

Leave a comment