பாரிசில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரின் நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பிரான்ஸ் நாட்டு தலைநகர் பாரிசில் அமைந்துள்ள ஒபரா ஹவுஸ் அருகே மர்ம நபர் ஒருவர் கண்ணில் எதிர்ப்பட்ட நபர்களை கத்தியால் குத்தி தாக்குதலில் ஈடுபட்டான். இந்த தாக்குதலில் ஒருவர் உயிரிழந்தார். மேலும் 4 பேர் படுகாயம் அடைந்தனர். சம்பவ இடம் சென்ற போலீசார் தாக்குதல் நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர்.
இந்த தாக்குதலுக்கு பிரான்ஸ் அதிபர் எம்மானுவல் மெக்ரான் கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ். அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில், பாரிசில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவரின் நண்பரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுதொடர்பாக போலீசார் கூறுகையில், பாரிசில் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியவன் செசன்யா நாட்டை சேர்ந்தவன் என்பதும், கம்சாத் (29) என்ற வாலிபர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த தாக்குதல் தொடர்பாக கம்சாத்தின் நண்பரை கைது செய்துள்ளோம். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம் என தெரிவித்துள்ளனர்.