பன்னாட்டு சமூகத்திடம் தமிழின அழிப்புக்கு நீதி கோரி 4 வது நாளாக தொடரும் கவனயீர்ப்பு கண்காட்சி இன்று காலை டோர்ட்முண்ட் நகரிலும் மாலை எஸ்சென் நகரிலும் மக்கள் நடமாடும் பிரதான சாலைகளில் பார்வைக்கு வைக்கப்பட்டது.இக் கண்காட்சி நிகழ்வில் வேற்றின மக்களுக்கு ஆங்கிலத்திலும் , யேர்மன் மொழியிலும் துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டு விளக்கங்கள் கொடுக்கப்பட்டது.இவ் நிகழ்வுக்கு ஆதரவாக குறிப்பிட்ட நகர மக்களுக்கும் ஒன்றுகூடியிருந்தனர்.
யேர்மன் தலைநகரில் ஆரம்பிக்கப்பட்ட கவனயீர்ப்பு கண்காட்சியை தொடர்ச்சியாக ஏனைய நகரங்களுக்கு கொண்டு செல்லும் மனிதநேய செயற்பாட்டாளர்கள் எஸ்சென் நகரில் அமைந்துள்ள மாவீரர் நினைவுத் தூபிக்கு சென்று வணக்கம் செலுத்தி தமது பயணத்தை நாளை காலை Düsseldorf நகரை நோக்கியும் மாலை Frankfurt நகரை நோக்கியும் பயணிக்க இருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.