மண்ணெண்ணையைப் பயன்படுத்தும் மின்சார வசதியில்லாத சமுர்த்தி உதவி பெறும் குடும்பங்கள் மற்றும் பெருந்தோட்டங்களிலுள்ள குடும்பங்கள் என்பவற்றுக்கு பழைய விலையில் மண்ணெண்ணையை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
நிதி அமைச்சு இதனை அறிவித்துள்ளது.
சமுர்த்தி பயனாளிகளுக்கு மண்ணெண்ணை மானியம் எதிர்வரும் ஜூன் மாதம் முதல் வழங்கப்படவுள்ளதாகவும் நிதி அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.