தென் மாகாணத்தின் இரண்டாவது வர்த்தக வலயத்தை வெலிகம பிரதேசத்தில் அமைக்கப்படவுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இதனை அமைக்கும் பணிகள் இந்த வருடத்தில் ஆரம்பிக்கப்படும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
காலி, ஹபராதுவ பிரதேசத்தில் புதிய செயலாளர் அலுவலக கட்டடத்தொகுதி பொதுமக்களிடம் கையளிக்கப்பட்டது. இதற்கான நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.