இலங்கையில் ஜப்பானில் தயாரிக்கப்படும் வாகனங்களை குறைந்த பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
ஜப்பான் யென்னுடன் ஒப்பிடும் போது இலங்கை ரூபாயின் விலை வலுவாக உள்ளமையினால் இந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக ஜப்பான் வாகன இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போது சங்கத்தின் தலைவர் நிஷாந்த மீகல்லகே தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு ஜப்பானில் இருந்து கொண்டு வரப்படும் அதிகளவான வாகனங்கள், தயாரிப்பின் போது சிறு தவறுகளுக்கு உட்பட்டவை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தமது சங்கத்தின் ஊடாக வாகனம் ஒன்றை இறக்குமதி செய்யும் போது நுகர்வோருக்கு பொருத்தமான வாகனம் ஒன்றை கொண்டுவர முடியும் என்பதற்கான பொறுப்பினை தாம் ஏற்பதாக அவர் கூறியுள்ளார்.
சமகாலத்தில் இலங்கையில் பிரபலமடைந்துள்ள வெகன்ஆர் மோட்டார் வாகனம் ஜப்பான் சந்தையில் 14 இலட்சம் ரூபாவுக்கு விற்பனை செய்யப்படுகின்றது. எனினும் இலங்கையில் 20 இலட்சம் ரூபா வரி அறவிடப்படுவதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.