நான் யுத்த குற்றவிசாரணைகளிற்கு எதிரானவன் இல்லை எனவும் தெரிவித்துள்ள இராணுவ தளபதி மகேஸ் சேனநாயக்க தன்மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்கு இராணுவம் ஆர்வமாக உள்ளது என குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச அரங்கில் முன்வைக்கப்படும் யுத்தக்குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்காக இலங்கை இராணுவம் வெளிநாட்டு நடவடிக்கைகள் இயக்குநரகம் ஒன்றை ஏற்படுத்தியுள்ளதுஎன இலங்கையின் இராணுவதளபதி மகேஸ் சேனநாயக்க இதனை தெரிவித்துள்ளார்.
கொழும்பில் வெளிநாட்டு செய்தியாளர்களை சந்தித்தவேளை அவர் இதனை தெரிவித்துள்ளார்.இலங்கைக்கு வெளியே இராணுவத்திற்கு உரிய ஆதரவு இல்லாததன் காரணமாக தனக்கு எதிராக முன்வைக்கப்படும் பாரிய குற்றச்சாட்டுகளை எதிர்கொள்வதற்கான கட்டமைப்பொன்று அவசியம் என இராணுவம் கருதுகின்றது என அவர் தெரிவித்துள்ளார்.
இராணுவத்திற்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை உரிய தகவல்கள் புள்ளிவிபரங்களுடன் எதிர்கொள்ளவேண்டும் என இலங்கையின் இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.
இதனை கருத்தில் கொண்டு வெளிநாட்டு நடவடிக்கைகள் இயக்குநரகம் ஒன்றை ஏற்கனவே ஏப்ரலில் ஏற்படுத்தியுள்ளது என தெரிவித்துள்ள இராணுவத்தளபதி குறிப்பிட்ட இயக்குநரகம் கலந்தாலோசனைகளை மேற்கொண்டுவருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.
ஐக்கியநாடுகள் அமைதிப்படையில் இடம்பெற விரும்பும் இலங்கை இராணுவத்தினரின் மனிதஉரிமை செயற்பாடுகள் குறித்து ஆராய்வது அடுத்த சவாலான நடவடிக்கை என அவர் தெரிவித்துள்ளார்.
நான் யுத்த குற்றவிசாரணைகளிற்கு எதிரானவன் இல்லை எனவும் தெரிவித்துள்ள இராணுவ தளபதி தன்மீது சுமத்தப்பட்டுள்ள களங்கத்தை போக்குவதற்கு இராணுவம் ஆர்வமாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டில் உள்ளவர்கள் குற்றம்சாட்டுவது போன்று இராணுவம் வேண்டுமென்றே மனித உரிமை மீறல்களில் ஈடுபடவில்லை என்றால் விசாரணைகள் குறித்து அச்சப்படதேவையில்லை என தெரிவித்துள்ள இராணுவதளபதி யுத்தத்தின் போது சட்டங்களை மீறிய சம்பவங்கள் அதிகளவிற்கு இடம்பெறவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
சில படையினர்குற்றங்களில் ஈடுபட்டிருக்கலாம் இதற்காக முழு இராணுவத்தினரையும் குற்றம்சாட்ட முடியாது என தெரிவித்துள்ள இலங்கையின் இராணுவத்தளபதி இவ்வாறான குற்றங்களில் ஈடுபட்ட 14 பேர் ஏற்கனவே தண்டிக்கப்பட்டுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.