ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்க தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனுவை உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்தது.
தமது வங்கிக்கணக்கை தடை செய்துள்ள உத்தரவை இரத்து செய்யுமாறும், தம்மைக் கைது செய்வதற்காகக் கோட்டை நீதவான் நீதிமன்றம் விடுத்துள்ள பிடியாணையை மீளப்பெறுமாறு கோரியும், பொலிஸ் நிதிக்குற்றப் பிரிவின் பிரதம பொலிஸ் பரிசோதகர் நிஹால் பிரான்ஸிசிடம் 10 கோடி ரூபா இழப்பீடு கோரியும் உதயங்க வீரதுங்க இந்த அடிப்படை உரிமை மனுவைத் தாக்கல் செய்திருந்தார்.
குறித்த மனு உயர் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் குழாம் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோதே இந்தத் தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.