யாழ்ப்பாணம் உடுவில் மகளிர் கல்லூரியின் தற்போதைய பிரச்சனைகளைத் தீர்ப்பதற்காக பெற்றோர், பாதுகாவலர் சங்கம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இன்று யாழ்ப்பாணம் சுன்னாகத்தில் அமைந்துள்ள தனியார் விடுதியில் ஒன்று கூடிய 50ற்கும் மேற்பட்ட பெற்றோர்கள், பெற்றோர் பாதுகாவலர் சங்கத்தை அமைத்துள்ளனர்.
பெற்றோர் பாதுகாவலர் சங்கத்தின் தலைவராக சென் பற்றிக்ஸ் கல்லூரியின் ஆசிரியர் சி.எ.தயாபரனும், செயலாளராக க.வேல்தஞ்சன், மற்றும் பொருளாளராக ஸ்கந்தவரோதயா ஆரம்ப கல்லூரியின் அதிபர் வ.நந்தீஸ்வரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் மொத்தமாக 10 செயற்குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
உடுவில் மகளிர் கல்லூரியின் பிரச்சனைக்கு சுமூகமாக தீர்வு காணும் வகையில் இன்று ஆரம்பிக்கப்பட்ட குழுவானது, தென்னிந்திய திருச்சபையின் பேராயரும், உடுவில் மகளிர் கல்லூரியின் தலைவருமான டானியல் தியாகராஜாவை சந்தித்து கலந்துரையாடவுள்ளனர்.
இக் குழுவினருடனான சந்திப்பை நாளை காலை மேற்கொள்ளவுள்ளதாக தென்னிந்திய திருச்சபையின் ஆயர் தெரிவித்துள்ளார்.