பத்ரிநாதருக்கு 4 கிலோ எடையுள்ள தங்க குடை காணிக்கை

312 0

உத்தரகாண்டில் உள்ள பத்ரிநாதருக்கு 4 கிலோ எடையுள்ள தங்க குடையை பக்தர் ஒருவர் காணிக்கையாக வழங்கியுள்ளார்.

உத்தரகாண்ட் மாநிலத்தில் இந்து மக்களின் பிரபல வழிபாட்டு ஸ்தலங்களான கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் ஆலயங்கள் அமைந்துள்ளன. இவற்றில் கி.பி. ஏழாம் நூற்றாண்டில் உருவான பத்ரிநாத் ஆலயம் கடல் மட்டத்தில் இருந்து 10,170 அடி உயரத்தில் அமைந்துள்ளது.
இந்நிலையில், பத்ரிநாதர் கோவிலுக்கு குவாலியரில் வசிக்கும் ராஜ வம்சத்தினர் புதிய தங்க குடை ஒன்றை காணிக்கையாக அளித்துள்ளனர்.
குவாலியர் மகாராணி அஹில்யா பாய் சோல்கர் காணிக்கையாக அளித்த 4 கிலோ எடையுள்ள தங்க குடை பத்ரிநாத்துக்கு கொண்டு வரப்பட்டது.
பத்ரிநாதர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்ட தங்க குடைக்கு, வேத மந்திரங்கள் முழங்க முறைப்படி பூஜைகள் செய்யப்பட்டு பத்ரிநாத பெருமாளுக்கு சாத்தப்பட்டது.
இதற்காக நடந்த சிறப்பு பூஜையில் குவாலியரை சேர்ந்த ராஜ குடும்பத்தினரும், குடையை செய்தவர்களின் குடும்பத்தினரும் பங்கேற்றனர் என கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

Leave a comment