இன, மத, மொழியால் வேறுபாட்டாலும் நாம் அனைவரும் இலங்கையரே – மனோ

292 0

இன, மத, மொழி ரீதியாக  வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் இலங்கையர்  என்ற நாமத்தின் கீழ் அனைவரும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என தேசிய கலந்துரையாடல் நல்லிணக்க மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்தார்.

தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அமைச்சில் இன்று தேசிய கலந்துரையாடல் நல்லிணக்கம் மற்றும் அரச கரும மொழிகள் பிரதியமைச்சராக அலி ஸாஹிர் மெளலானாவின் உத்தியோகபூர்வ பதவியேற்றார். இந்  நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாட்டில் காணப்படும் இனப்பிரச்சினை காரணமாகவே தேசிய ஒருமைப்பாடு நல்லிணக்க அமைச்சு உருவாக்கப்பட்டுள்ளது. ஆயினும் அதனை இல்லையென்று மறுப்பவர்கள் வெறும் முட்டாள்களே ஆவார்.

எனவே தான் நாட்டு மக்களின் உள்ளத்தை கட்டியெப்பும் பணியில் ஈடுபட்டிருப்பதன் மூலம் மீண்டுமோர் யுத்தம் இந்த நாட்டில் ஏற்படுவதை தவிர்க்க முடியும்

நாம் 10 வருடங்களுக்கு மேல் போராடி இவ் அரசாங்கத்தை உருவாக்கியுள்ளோம். எனவே இதனை எளிதில் விட்டுவிட மாட்டோம். அரசாங்கத்தின் காலம் நிறைவுற்றாலும் எதிர்வரும் காலங்களிலும் நாங்கள் பணிசெய்வோம்.

மேலும் இன்று ஜனாதிபதியும் பிரதமரும் முரண்பட்டுக் கொண்டுள்ளனர் என பலர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறு அவர்களிடையே முரண்பாடு கிடையாது எதிர்வரும் ஒன்றரை வருடங்களில் நாட்டின் அபிவிருத்தி பணிகள் இவர்களின் தலைமையின் கீழ்தான்  இடம்பெறவுள்ளது என்றார்.

Leave a comment