விசேட நீதிமன்றங்களை உருவாக்கும் சட்ட மூலம் இன்று பாராளுமன்றத்துக்கு- நீதி அமைச்சு

219 0

விசேட நீதிமன்றங்களை உருவாக்குவதற்கு தேவையான திருத்தச் சட்டமூலம்  இன்று (9) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ளதென நீதி அமைச்சர் தலதா அத்துகோரள தெரிவித்தார்.

இந்த சட்டத்தின் மூலம் விசேட நீதிமன்றங்களை உருவாக்க முடியும். எனினும் முதற்கட்டமாக மூன்று நீதிபதிகளைக் கொண்ட ஒரு விசேட நீதிமன்றம் நடைமுறைக்கு வரும் என்றும் அமைச்சர் தலதா அத்துகோரள கூறினார்.

இந்த விசேட நீதிமன்றத்தில் நாள் தோறும் வழக்குகளை விசாரித்து ஆகக்குறைந்தது ஒரு மாதத்தில் ஒரு வழக்குக்கான தீர்ப்பை வழங்க முடியுமென்றும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

Leave a comment