மத்தள விமான நிலையம் தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள்

378 0

mattala-812மத்தள விமான நிலையத்தை தனியார் நிறுவனத்திடம் ஒப்படைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்படி, தனியார் நிறுவனமொன்றுக்கு வழங்குவதற்காக விலை மனுவை கோரியுள்ளதாக போக்குவரத்து அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

மத்தள விமான நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு தடையாக இருக்கும் பல விடயங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

இந்தக் குறைகளை நிவர்த்தி செய்து மத்தள விமான நிலையத்தின் நடவடிக்கைகளை மீண்டும் முன்னெடுத்துச் செல்வதற்காகவே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.