நியூயோர்க்கிலுள்ள ஐநாவுக்கான சிறீலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்துக்கான இராணுவ இணைப்பதிகாரியாக மேஜர் ஜெனரல் சுமேத பெரேரோ நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐ.நாவுக்கான சிறிலங்காவின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியின் பணியகத்துக்கான இராணுவ இணைப்பதிகாரியாக கடந்த ஒரு ஆண்டாகப் பணியாற்றிய மேஜர் ஜெனரல் உபய மெடவெலவின் பணிக்காலம் முடிவுற்றதையடுத்தே, மேஜர் ஜெனரல் சுமேத பெரேரா இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.