ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படமாட்டாது

7410 26

150715124318_maithree_photo_624x351_afp_nocreditஇலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சர் பதவி எதுவும் வழங்கப்போவதில்லையென சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

அத்துடன் அமைச்சரவையில் மேலதிக அமைச்சர்களையும் இணைத்துக்கொள்ளப்போவதில்லை யெனவும் தெரிவித்துள்ளார்.தற்போது இருக்கும் அமைச்சர்களின் எண்ணிக்கையைவிட ஒருவரேனும் அதிகரிக்கப்படக்கூடாது என்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

அண்மையில் ஊடகங்களில் ஆறுமுகம் தொண்டமானுக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படப்போவதாக செய்திகள் வெளிவந்தன. இவற்றில் எந்தவித உண்மைத்தன்மையும் இல்லை. இதுகுறித்து ஆறுமுகம் தொண்டமான் என்னிடம் பேசவில்லையெனவும் குறிப்பிட்டுள்ளார். சிங்கள நாளிதழ் ஒன்று வழங்கிய செவ்வியிலேயே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

Leave a comment