பதிவுசெய்யப்படாத இணையத்தளங்களை முடக்க நடவடிக்கை

345 0

affilwebsites4-bordered-354-x-252சிறீலங்காவிலுள்ள அனைத்து இணையத்தளங்களையும் பதிவு செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கும் தொலைத்தொடர்புகள் ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கும் இன்று சந்திப்பொன்று நடைபெற்றது. இச்சந்திப்பின்போதே குறித்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

தற்போது செயற்பட்டு வரும் இணையத்தளங்களை கணக்கிடமுடியாதுள்ளது எனவும், அரச நிறுவனங்கள், அமைச்சு, தனியார் நிறுவனங்கள் உட்பட பல்வேறு மட்டங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான இணையத்தளங்கள் இயங்கிவருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சில இணையத்தளங்கள், ஊடக சுதந்திரம் மற்றும் ஊடக ஒழுங்கை மீறிச் செயற்படுவதாக அரச தொலைத்தொடர்புகளை ஒழுங்குபடுத்தும் ஆணைக்குழுவுக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே இத்தகைய செயற்பாடுகளைக் கட்டுப்படுத்த தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு சிறீலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார்.

இதற்கமைய, தொலைத்தொடர்பு ஆணைக்குழுவில் பதியப்படாத அனைத்து இணையத்தளங்களையும் முடக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் மைத்திரிபால சிறிசேன அறிவுறுத்தியுள்ளார்.