அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு நினைவு தினமானது வரலாற்றின் இரண்டு முரண்பாடான பிம்பமுடைய நாளாக திகழ்வதாக பிரதமர் நரந்திர மோடி தெரிவித்துள்ளார்.
2001 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடந்த அல்‐கொய்தா தாக்குதலின் 15 ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது.
15 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் உலகின் வல்லரசு நாடான அமெரிக்காவின் மீது அல்கொய்தா பயங்கரவாதிகள், அந்நாட்டின் விமானங்களை கொண்டே தற்கொலைபடை தாக்குதல் நடத்தினர். அந்நாட்டின் உலக வர்த்தக மைய இரட்டை கோபுரம் தரைமட்டமானது.
இந்நிலையில், அமெரிக்க இரட்டை கோபுர தகர்ப்பு நினைவு தினத்தையொட்டி, செப்டம்பர் 11 தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரதமர் நரந்திர மோடி நினைவஞ்சலி செலுத்தினார்.
இது தொடர்பாக டுவிட்டர் வலை தளத்தில் மோடி கூறியுள்ளதாவது:-
செப்டம்பர் 11-ம் தேதியில் மிகவும் முரண்பாடான இரண்டு வரலாற்று பிம்பம் அரங்கேறியுள்ளது. செப்டம்பர் 11 தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறேன்.
இதே நாளில் தான் விவேகனந்தர் உலகப் புகழ்பெற்ற சிகாகோ உரையை அமெரிக்காவில் மேற்கொண்டு ஏராளமான மக்களின் உள்ளங்களை கொள்ளை கொண்டார்.
இந்தியாவின் உயரிய கலாச்சாரத்தையும், சர்வதேச சகோதரத்துவம் மற்றும் நல்லிணக்கத்தின் வலிமையையும் விவேகானந்தர் அன்று வெளிப்படுத்தினார். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.