சமுர்த்தி வங்கியை மக்கள் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவருவதற்கு பிரதமர் எடுத்துள்ள தீர்மானத்தில் எவ்விதத்திலும் உடன்பட முடியாது என முன்னாள் சமுர்த்தி விவகார அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்று (06) இடம்பெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் மே தின நிகழ்வின் போது பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சமுர்த்தி வங்கியை மக்கள் வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர நடவடிக்கை எடுக்க உள்ளதாக தெரிவித்திருந்தார்.
இது குறித்துக் கருத்துத் தெரிவிக்கும்போதே எஸ்.பீ. திஸாநாயக்க எம்.பி. இவ்வாறு கூறியுள்ளார்.
சமுர்த்தி தொடர்பில் மாற்றங்களை கொண்டுவர வேண்டுமானால் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை பெற வேண்டும். அவ்வாறில்லாமல் எந்த மாற்றத்தையும் மேற்கொள்ள முடியாது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.