33ஆவது ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடர் எதிர்வரும் 13ஆம் திகதி தொடங்கி 30ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.
இக்கூட்டத்தொடரின் நிகழ்ச்சி நிரலில் சிறீலங்கா தொடர்பான விவகாரங்கள் எதுவும் இடம்பெறவில்லையென்பதுடன், சிறீலங்காவில் ஏற்பட்டுள்ள மனித உரிமை முன்னேற்றங்கள் தொடர்பாக உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள் கருத்துக்களை வெளியிட்டு கேள்விகளைக் கேட்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இக்கூட்டத்தொடரில், சிறீலங்கா சார்பாக, ஜெனீவாவின் சிறீலங்கா வதிவிடப் பிரதிநிதி ரவிநாத ஆரியசிங்க கலந்துகொள்ளவுள்ளதுடன், உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகளினால் எழுப்பப்படும் கருத்துக்கள் மற்றும் கேள்விகளுக்கும் இவரே பதிலளிப்பார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், 33ஆவது ஐநா மனித உரிமைகள் கூட்டத்தொடரின் ஆரம்ப நாளில், ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹூசைன் சிறீலங்கா தொடர்பான கருத்துக்களையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.