எழுக தமிழ் பேரணிக்கு வடக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் அணிதிரள ஏற்பாடுகள்

324 0

elukatamil-300x164தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் எதிர்வரும் 24ஆம் திகதி நடைபெறவுள்ள எழுக தமிழ் பேரணிக்கு வடக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் மக்கள் அணிதிரள ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தமிழத் தேசத்தில் திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட இன அழிப்பு, திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்கள், தமிழ் மக்களின் மீள் குடியேற்றத்திற்கு முட்டுக்கட்டை போடுதல், தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யாமை, காணாமல் போனோர் விடயத்தில் காட்டப்படும் அசமந்தப்போக்கு, இனப்பிரச்சனைக்குத் தீர்வு காண்பதில் காலம் தாழ்த்தும் கபடத்தனம் போன்ற செயற்பாடுகளைக் கண்டித்து இப்பேரணி நடைபெறவுள்ளது.

இந்த மக்கள் எழுச்சிப் பேரணிக்கு அனைத்துத் தரப்பினரையும் ஆதரவு நல்குமாறு தமிழ் மக்கள் பேரவை கோரிக்கை விடுத்துள்ளது. இப்பேரணிக்கு பல்வேறு தமிழ்க் கட்சிகளும் ஆதரவு தெரிவித்து வருவதுடன், வடக்கு மாகாண சபை பூரண ஒத்துழைப்பை வழங்கியுள்ளது. இதற்கான போக்குவரத்து ஏற்பாடுகளை வடக்கு மாகாண சபை போக்குவரத்துப் பிரிவு வழங்குவதாக உறுதியளித்துள்ளது.