வலிகாமம் வடக்கு காணிகள் இன்று விடுவிப்பு

5330 23

vali-northயாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயத்திற்கு உட்பட்ட பொது மக்களது 263 ஏக்கர் காணிகள் இன்று விடுவிக்கப்படவுள்ளன.
இது தொடர்பான நிகழ்வு பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்யாராட்சியின் தலைமையில் இடம்பெறவுள்ளது
இதன்படி வலிகாமம் வடக்கில் உள்ள ஜே 233, ஜே 234, ஜே 235, ஜே 236, குரும்பசிட்டி கட்டுவன் மற்றும் வறுத்தலைவிளான் ஆகிய பகுதிகளில் உள்ள 263 ஏக்கர் காணிகளே இவ்வாறு விடுவிக்கப்படவுள்ளன.
இந்தநிலையில், குறித்த பிரதேசத்தில் 26 வருடங்களின் பின்னர் பொதுமக்கள் குடியமர்த்தப்படவுள்ளனர்.
இதேவேளை, காங்கேசன்துறை தொடரூந்து நிலையமும் மக்கள் பாவனைக்காக வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
யுத்தம் காரணமாக குறித்த பகுதி அதியுயர் பாதுகாப்பு வலையமாக பிரகடனம் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a comment