அமெரிக்க ஓபன் டென்னிஸ்-நம்பர் ஒன் வீராங்கனையாக மகுடம் சூடிய ஏஞ்சலிக் கெர்பர்

361 0

201609110943557156_angelique-kerber-solidifies-her-no-1-status-by-winning-the_secvpfஅமெரிக்க ஓபன் டென்னிசில் அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிளிஸ்கோவாவை வீழ்த்தி, புதிய நம்பர் ஒன் வீராங்கனை கெர்பர் முதல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார்.

அமெரிக்க ஓபன் டென்னிசில் அமெரிக்க நட்சத்திர வீராங்கனை செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறிய பிளிஸ்கோவாவை வீழ்த்தி, புதிய நம்பர் ஒன் வீராங்கனை கெர்பர் முதல் அமெரிக்க ஓபன் டென்னிஸ் பட்டம் வென்றார்.

நியூயார்க் நகரில் நடந்து வரும் ‘கிராண்ட்ஸ்லாம்’ அந்தஸ்து பெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் திருவிழா இறுதி கட்டத்தை எட்டி விட்டது.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப் போட்டியில், அரைஇறுதியில் ‘நம்பர் ஒன்’ வீராங்கனை செரீனா வில்லியம்ஸை (அமெரிக்கா) வீழ்த்திய 11–ம் நிலை வீராங்கனை கரோலினா பிளிஸ்கோவா (செக்குடியரசு), ஆஸ்திரேலிய ஓபன் சாம்பியனும், புதிய நம்பர் ஒன் வீராங்கனையுமான ஏஞ்சலிக் கெர்பரை (ஜெர்மனி) எதிர்க்கொண்டார். ஆட்டம் தொடங்கியதுமே கெர்பர் கையே ஓங்கியது, தனது அனுபவ ஆட்டம் மூலம் கெர்பர் முதல் செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றினார். கெர்பருக்கு இரண்டாவது செட்டில் பிளிஸ்கோவா ’செக்’ வைத்தார். டென்னிஸ் நட்சத்திரம் செரீனாவை வில்லியம்ஸை வீழ்த்திய பிளிஸ்கோவா இரண்டாவது செட்டில், கெர்பருக்கு சவாலாக விழங்கினார்.

கெர்பரும் போராடினார், இருப்பினும் செட்டை பிளிஸ்கோவா 6-4 என்ற கணக்கில் கைப்பற்றினார். இதனால் ஆட்டம் மூன்றாவது செட்டை நோக்கி சென்றது. இருவரும் சளைக்காமல் அதிரடி காட்டினர், இறுதியில் கெர்பர் செட்டை 6-4 என்ற கணக்கில் தன்வசப்படுத்தினார்.

ஏற்கனவே செரீனாவை பிளிஸ்கோவா வீழ்த்தியதால் தரவரிசையில் முதலிடம் பிடித்த கெர்பர் பட்டம் வென்றதால் தன்னுடைய முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டார். கெர்பர் இந்த ஆண்டு வென்று இருக்கும் இரண்டாவது  ‘கிராண்ட்ஸ்லாம்’ பட்டம் இதுவாகும்.

“இன்று என்னுடைய கனவு நினைவாகி உள்ளது, என்னுடைய மகிழ்ச்சியை கொண்டாட விரும்புகின்றேன். இது நம்ப முடியாதது. என்னுடைய இரண்டாவது  ‘கிராண்ட்ஸ்லாம்’ பட்டத்துடன் இங்கே நிற்கிறேன், இது எனக்கு மிகப்பெரியது. பிளிஸ்கோவாவிற்கு எதிராக விளையாடுவது என்பது கடிமானதே,” என்று கெர்பர் கூறிஉள்ளார்.

அண்மையில் சின்சினாட்டி இறுதி ஆட்டத்தில் பிளிஸ்கோவா, கெர்பரை நேர் செட்டில் சாய்த்தது நினைவு கூரத்தக்கது. கெர்பரை, பிளிஸ்கோவா நேர்செட்டில் (6-3 6-1) வீழ்த்தி பட்டம் வென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

செரீனா அரைஇறுதியில் மண்ணை கவ்விய அதே வேளையில், கெர்பர் அரைஇறுதியில் வெற்றி கண்டதால் சர்வதேச டென்னிஸ் தரவரிசையில் புதிய ‘நம்பர் ஒன்’ வீராங்கனையாக உருவெடுத்து உள்ளார். விரைவில் வெளியாகும் தரவரிசையில் கெர்பர் ‘நம்பர் ஒன்’ அரியணையில் ஏறுகிறார். முதலிடத்தை பிடிக்கும் 2–வது ஜெர்மனி வீராங்கனை கெர்பர் ஆவார். இதற்கு முன்பு அவரது முன்மாதிரியான ஜெர்மனி ஜாம்பவான் ஸ்டெபி கிராப் முதலிடத்தில் இருந்திருக்கிறார்.