இல்லாத பிரச்சினையொன்றைத் தீர்க்கப் போய், பிரச்சினையொன்றை உருவாக்கிக் கொள்வதற்கு தமக்கு எந்தவிதத் தேவையும் இல்லையென பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மம்பில தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியின் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் குறித்து அவரிடம் வினவிய போதே இதனைக் கூறியுள்ளார்.
கூட்டு எதிர்க் கட்சியில் ஜனாதிபதித் தேர்தலுக்கான பொது வேட்பாளர் தொடர்பில் கருத்து முரண்பாடு நிலவுவதாக சிலர் காட்ட முயற்சிக்கின்றனர். எம்மிடம் கருத்து முரண்பாடு ஏற்படுவதற்கு ஜனாதிபதித் தேர்தல் ஒன்று வரவில்லை. அதற்கு இன்னும் காலம் இருக்கின்றது.
எமது அடுத்த கட்ட முக்கிய நடவடிக்கை ஒத்திவைக்கப்பட்டு வரும் மாகாண சபைத் தேர்தலை நடாத்தச் செய்து வெற்றி கொள்வதாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.