மட்டக்களப்பு மே தினக் கூட்டத்தில்16 பேரும் கலந்துகொள்வோம்-டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன

237 0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் பிளவு ஏற்பட்டிருப்பதாக காட்டுவதற்கு சிலர் முன்னெடுத்து வரும் முயற்சிக்கு தாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென அரசாங்கத்திலிருந்து விலகிச் சென்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேரில் ஒருவரான டபிள்யு.டி.ஜே. செனவிரத்ன தெரிவித்தார்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேசத்தில் நாளை (7) நடைபெறவுள்ள மே தினக் கூட்டத்தில் அரசாங்கத்திலிருந்து விலகிய 16 பேரும் கலந்துகொள்வார்களா? என வினவியதற்கே அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

கட்சியின் ஒரு அம்சமாக நடைபெறும் இக்கூட்டத்தில் நாம் கலந்துகொள்கின்றோம். நாம் இதில் கலந்துகொள்ளாது போனால், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்குள் பிளவு ஏற்பட்டிருப்பதாக காட்டுவதற்கு சிலர் எதிர்பார்த்துள்ளனர். அவ்வாறானவர்களுக்கு கட்சியை கொச்சைப்படுத்த நாம் இடமளிக்க மாட்டோம் எனவும் அவர் மேலும் கூறினா

Leave a comment