காலி முகத்திடலுக்கு அரசாங்கம் பயந்ததனால், காலியில் நடாத்துகிறோம்- மஹிந்த

234 0

கூட்டு எதிர்க் கட்சியின் மே தினக் கூட்டம் நாளை (07) காலியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது.

கடந்த மே தினக் கூட்டத்தை நடாத்த காலி முகத்திடலை வழங்கிய அரசாங்கம் அச்சத்தில் இம்முறை அதனை வழங்க மறுத்துள்ளதாகவும், இம்முறை மே தினக் கூட்டத்தில் பல்வேறு அறிவிப்புக்களை விடுக்கவுள்ளதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

மக்கள் இன்று முகம்கொடுத்துள்ள வரிப் பிரச்சினைக்கு எதிராக பலமாக குரல் எழுப்பவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a comment