எதிர்வரும் உள்ளுராட்சி மன்ற தேர்தல்களில் அரசாங்கம் நிச்சயம் தோல்வியடையும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
அம்பலாந்தோட்டை பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே இவர் இதனை தெரிவித்தார்.
அத்துடன், தற்போது ஐக்கிய தேசிய கட்சியும் இல்லை, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியும் இல்லை.
இதனிடையே, நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளது.
மக்கள் கடும் விசனத்தில் உள்ளனர்.
இவ்வாறான நிலையில் தேர்தல் இடம்பெறுமாயின் அதில் மக்கள் தங்களில் நிலையை அரசாங்கத்திற்கு நன்கு உணர்த்துவர் என்றும் மஹிந்த குறிப்பிட்டுள்ளார்.