மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகரை மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பவேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ கடந்தவாரம் மலேசியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார்.
இதன்போது அவருடன் செயற்பட்டார் என்ற குற்றச்சாட்டில், மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், இப்ராஹிம் அன்சாரி தாக்குதலுக்கு இலக்கானார்.
இந்த நிலையில், இந்த தாக்குதலை விடுதலை புலி அமைப்பினரே மேற்கொண்டனர் என்ற தோறனையை உருவாக்கி, மலேசியாவில் உள்ள தமிழர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்த அன்சாரி முனைவதாக, வைகோ குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தநிலையிலேயே அவரை மீண்டும் நாட்டுக்கு திருப்பி அழைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.