ஒட்டகம் குர்பானி கொடுக்க அரசு அனுமதி தர வேண்டும்- ஜவாஹிருல்லா

341 0

201609110956093758_camel-qurbani-government-must-give-permission-jawahirullah_secvpfஒட்டகம் குர்பானி கொடுக்க அரசு அனுமதி தர வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா அறிக்கை விடுத்துள்ளார்.

மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-தமிழகத்தில் கடந்த பத்தாண்டுகளாக முஸ்லிம்கள் பக்ரீத் எனப்படும் தியாகத் திருநாளில் ஒட்டகங்களை அறுத்து அதன் இறைச்சியை அனைவருக்கும் பகிர்ந்து வருகின்றனர்.

ஒட்டகங்களை அறுத்து குர்பானி கொடுக்க தடை விதிக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதி மன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் இந்த ஆண்டு ஒட்டகங்களை அறுத்து பலியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.

மத ரீதியான பலியிடுதலை தடைசெய்ய இயலாது என்று உச்சநீதிமன்றம் ஏற்கனவே குறிப்பிட்டுள்ள மதச் சம்பந்தமான பலியிடல்கள் காலங் காலமாக நடைபெற்று வருவதாகவும், அதனை நீதிமன்றங்கள் ஆராய்ந்து கொண்டிருக்க முடியாது எனவும் இத்தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டது.

எனவே சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒட்டகம் குர்பானி தொடர்பான தீர்ப்பு மதரீதியான பிராணிகளின் பலியிடல்கள் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பிற்கு முரணானது. எனவே தமிழக அரசு முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து ஒட்டகம் குர்பானி கொடுக்க உரிய வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

வெளியூர்களிலிருந்து வாகனங்களில் குர்பானிக்காக கொண்டு வரப்படும் ஆடு, மாடுகளை மிருகவகை என்ற பெயரால் தடுத்து நிறுத்தி இடையூறு அளிக்காமல் இருக்கவும் உரிய நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.