பெரியார் சிலைக்கு 17-ந்தேதி மதுசூதனன் மாலை அணிவிக்கிறார்

348 0

201609111140403070_thanthai-periyar-138th-birth-day-admk-participate_secvpfதந்தை பெரியாரின் பிறந்த நாளை முன்னிட்டு வருகிற 17-ந்தேதி சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு அ.தி. மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் மாலை அணிவிக்க இருப்பதாக அதிமுக தலைமை கழகம் அறிவித்துள்ளது.

அ.தி.மு.க. தலைமைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 138- வது பிறந்த நாளான வருகிற 17-ந்தேதி (சனிக் கிழமை) காலை 10.30 மணி அளவில் சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு அ.தி. மு.க. அவைத் தலைவர் மதுசூதனன் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும் மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில் கழக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, சிறுபான்மையினர் நலப்பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் உள்பட கழத்தின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு மற்றும் கூட்டுறவு சங்கங்களின் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாக கலந்து கொள்வார்கள். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.