அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ரோனல்ட் ரேகனை சுட்டுக்கொல்ல முயன்ற, ஜோன் ஹின்க்லோ என்பவர் 35 வருடங்களில் பின்னர் மனநல காப்பகத்தில் இருந்து நேற்று விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
ரோனல்ட் ரேகன் ஜனாதிபதியாக பதவியேற்று சில வாரங்களில் துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் உயிர் தப்பினார்.
இந்தநிலையில், இந்த துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர் மனநல காப்பகம் ஒன்றிட்கு அனுப்பட்டார்.
தற்போது 61 வயதாகும் அவர், கடும் நிபந்தனைகளின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதன்படி, அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மாத்திற்கு இருமுறை மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.