போலி இந்திய கடவுச் சீட்டை பயன்படுத்தி ஜெர்மன் நோக்கி பயணிக்க முற்பட்ட விடுதலை புலி உறுப்பினர்களுடன் தொடர்பு கொண்ட இலங்கையர் ஒருவர் இந்தியாவில் இருந்து நாடு கடத்தப்பட்டுள்ளார்.
37 வயதான சுதன் சுப்பையா என்ற இவர் பூனே வானூர்தி நிலையத்தில் வைத்து இந்த மாத முற்பகுதியில் கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில், அவர் முப்பை ஊடாக கடந்த வெள்ளிக்கிழமை இலங்கைக்கு நாடு கடத்தப்பட்டுள்ளார்.
இவர் இந்தியாவின் தமிழ் நாட்டில் வசிப்பவர் என தமது கடவுச் சீட்டை பெற்றுள்ளதாக தெரியவந்துள்ளது.
விடுதலை புலிகள் அமைப்பில் ஆயுத பயிற்சி பெற்றுள்ள இவர், பின்னர் அந்த அமைப்பில் இருந்து விலகினார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.